fbpx

இந்தியில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா?.. வாயை பிளக்கும் திரையுலகினர்..!

இந்தி படத்தில் நடிக்க விஜய் சேதுபதி 21 கோடி ரூபாய் சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி வெயிட்டான எந்த கடை பத்திரமாக இருந்தாலும் நடித்து வருகிறார். அதிலும் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார். ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் போன்ற வில்லன் வேடத்தில் நடித்த படங்கள் பெருமளவில் பாராட்டைப் பெற்றன. கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்த வில்லன் கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பை பெற்றது.

தெலுங்கு படங்களிலும் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்க அழைப்புகள் வருகின்றன. சென்டிமென்ட் ஆகவே, கதாநாயகனாக நடித்த படங்களைவிட வில்லனாக நடிக்கும் படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன என திரையுலகில் பேசப்படுகிறது. இந்நிலையில், இந்தியில், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோனே ஆகியோர் நடிக்கும் ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த படத்தில் அவருக்கு 21 கோடி ரூபாய் சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சாதாரனமாக விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிப்பதற்கே ரூ.15 கோடிதான் வாங்குகிறார். தற்போது வில்லனாக நடிக்க 21 கோடி ரூபாய் வாங்குவது திரையுலகினர் மத்தியில் வாயை பிளக்க வைத்துள்ளது. ஜவான் படம் இந்தி மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் வெளியாக இருப்பதால் அதிக சம்பளம் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.

Rupa

Next Post

நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய்..? எந்த படத்தில் தெரியுமா?

Tue Aug 30 , 2022
‘ஏகே 62’ படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வலிமை’ படத்திற்குப் பிறகு ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் 3-வது முறையாக நடிகர் அஜித் இணைந்துள்ளப் படம் ‘ஏகே 61’. இந்தப் படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. மஞ்சு வாரியர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹைதராபாத், சென்னை என விறுவிறுப்பாக […]
நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய்..? எந்த படத்தில் தெரியுமா?

You May Like