சென்ற வாரம் மதுராந்தகத்தில் கலாச்சாராயத்தை குறித்து 8 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, மதுராந்தகம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிமேகலை மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, தற்போது மதுராந்தகம் டிஎஸ்பியாக இருந்த மணிமேகலை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது மதுராந்தகம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். அதன் காரணமாக, பழனியைச் சேர்ந்த சிவசக்தி மதுராந்தகம் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.