fbpx

புதுவை அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் 33 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு…..! பொறுப்பாளரை தேடும் போலீஸ்…..!

புதுவை கோம்பாக்கம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இருக்கிறது இதன் தலைவராக கோம்பாக்கத்தைச் சேர்ந்த எம்பெருமாள்( 69) என்பவர் இருக்கிறார். இந்த சங்கத்தின் நிர்வாக பொறுப்பாளராகவும், முதுநிலை எழுத்தாளராகவும் பார்ப்பன்சாவடியைச் சேர்ந்த கதிரவ (48) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

கொம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உறுப்பினர் தங்களது நகைகளை குறைந்த வட்டிக்கு அடமானம் வைத்து கடன் பெற்று இருக்கிறார்கள். இதற்கு நடுவே இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் வருடாந்திர தணிக்கை முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்ததாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, 5 பேர் அடங்கிய தணிக்கை குழுவைச் சார்ந்தவர்கள் கடந்த 18ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் கூட்டுறவு கடன் சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது 201 நகை கடன் கணக்குகள் உள்ளதாகவும் அதில் பாதுகாப்பு பெட்டகத்தில் 198 நகை கடன் கணக்கு உண்டான நகைகள் மட்டுமே இருப்பதாகவும், 18 நகை கடன் கணக்குகளுக்கு உண்டான 58.500 கிராம் மதிப்பிலான நகைகள் காணாமல் போய் இருப்பதும் தெரியவந்தது.

இதன் வெளிச் சந்தை மதிப்பு 33 லட்சம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரித்தபோது சங்கத்தின் நிர்வாக பொறுப்பாளர் கதிரவன் அந்த நகைகளை திருடி சென்றதும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் திடீரென்று விடுமுறையில் சென்று விட்டதும் தெரியவந்தது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் எம்பெருமாள் முதலியார் பேட்டை காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதனை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் கதிரவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

கும்பகோணம் அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு….! பேருந்தில் இருந்து இறக்கி விட்டதால் ஆத்திரம் கொண்ட பயணி ரகளை…..!

Sat May 20 , 2023
காரைக்காலில் இருந்து கும்பகோணத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று முன்தினம் மாலை வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுப்பிரமணியன் என்பவர் ஓட்டுனராகவும் இளமாறன் (55) என்றவர் நடத்துனராகவும் பணியாற்றி வந்தனர். இந்த பேருந்தில் அம்பரதூறு பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுரேஷ் (45) என்ற பயணி ஏறினார் அதோடு அவர் பயணச்சீட்டு வாங்காமல் பயணித்ததாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பேருந்தில் நடத்துனர் இளமாறன் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் சுரேஷை கீழே […]

You May Like