சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் எதையும் அறிவிக்க கூடாது என்பதுதான் தேர்தல் விதிமுறை.ஆனால் முதலமைச்சர் பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்பது தொடர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
முதலமைச்சர் பேசியது தேர்தல் விதி மீறல் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி மோசம் செய்வது தவறு. தேர்தல் விதிமுறை மீறிய செயலில் அவர் ஈடுபட்டு இருக்கிறார். தூங்கிக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம் உடனடியாக இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்டிருக்கின்ற மோதல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் கட்சி உரிமை கொடுக்க முடியும். அப்படி பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு இருக்கிறது உட்கட்சி பிரச்சனைக்காக நீதிமன்றம் சென்றது தவறு என்று தெரிவித்து வந்தேன். நீதிமன்றமும் தற்போது தீர்ப்பை வழங்கி விட்டது என்று கூறியுள்ளார்.
ஆகவே ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும் பொதுக்குழு உறுப்பினர்கள் 99% எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் இருக்கிறார்கள். பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமியிடம் சரணடைந்து மன்னித்து விடுங்கள் என்று சொல்ல வேண்டியதானே ஏன் மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் இன்றைக்கு உள்ள சூழ்நிலையில், இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கிறது தற்சமயம் நீதிமன்றம் அவரிடமே அதை வழங்கி இருப்பதாக ஜான்பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.