fbpx

நடன கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கிய பேராசிரியர் நடவடிக்கை எடுக்க கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்த மாணவிகள்……! திருவான்மியூரில் பரபரப்பு…….!

சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் 200க்கும் அதிகமான மாணவிகள் நடனம் பயின்று வருகிறார்கள். இந்த கல்லூரியில் நடனம் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு வழங்குவதாக அந்த கல்லூரியின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

ஆகவே அந்த கல்லூரியில் பாலியல் தொந்தரவு வழங்கிய பேராசிரியர் மீது எழுந்திருக்கின்ற பாலியல் புகார் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா அந்த கல்லூரியின் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் அடையாறு மகளிர் காவல் நிலைய காவல்துறையை சார்ந்தவர்களும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில், அந்த கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கிய பேராசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து மாணவ மாணவிகள் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். பேராசிரியர் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கவும் தெரிவித்து அதனை வலியுறுத்தும் விதமாக மாணவிகளின் இந்த போராட்டம் நேற்றைய தினம் நள்ளிரவை தாண்டியும் நடந்தது

. இதற்கு நடுவே மாணவிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் இந்த கல்லூரியை வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி வரையில் மூடுவதற்கு கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு, கல்லூரி விடுதியில் தங்கி இருக்கும் அனைத்து மாணவர்களும் 2 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்றும் கல்லூரி நிர்வாகம் சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் இதனை ஏற்றுக் கொள்ளாத மாணவிகள் இரவு சமயத்திலும் தங்களுடைய போராட்டத்தை நடத்தி வந்தனர்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டு மாணவிகளுடன் நேற்று இரவு சென்னை தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் சக்கரவர்த்தி, மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அருள், வேளச்சேரி தாசில்தார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 6️ மணி நேரத்திற்கு அதிகமாக நடந்த இந்த போராட்டத்தில் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை.

ஆனாலும் மாணவ, மாணவிகள் தங்களுடைய போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதுடன், மறுபடியும் இன்று காலை 7 மணி அளவில் தங்களுடைய போராட்டத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துவிட்டு கலைந்து சென்றிருக்கிறார்கள்.

Next Post

மென்று துப்பிய சூயிங்கம் ரூ.45 லட்சத்திற்கு ஏலம்..!! யாருடையது தெரியுமா..?

Fri Mar 31 , 2023
அயர்ன் மேனாக நடித்து பிரபலமான ராபர்ட் டவுனி ஜூனியர் மென்று துப்பிய சூயிங்கம் ரூ.45 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. eBayல் சூயிங்கம் துண்டு ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. அதன் விலை 45 லட்சம் ரூபாய். கடந்த மாதம் நடைபெற்ற ஜான் ஃபேவ்ரூவின் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் ஸ்டார் விழாவில் அயர்ன் மேன் ராபர்ட் டவுனி ஜூனியர் தான் மெல்லும் பசையை எடுத்து, அதை ஃபவ்ரூவின் நட்சத்திரத்தின் மீது நகைச்சுவையாக […]
மென்று துப்பிய சூயிங்கம் ரூ.45 லட்சத்திற்கு ஏலம்..!! யாருடையது தெரியுமா..?

You May Like