கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே உள்ள குரூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் காசிவேல் (40) கட்டிட தொழிலாளியானை இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ருத்ரபதி (18) என்ற மகனும் இருக்கிறார்கள். இவர் 12ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டு அருகே உள்ள மாட்டுக்கொட்டகையில் அமர்ந்திருந்தார் என்று சொல்லப்படுகிறது.
அப்போது பக்கத்து வீட்டு சார்ந்த கருப்பன் என்பவரின் மகன் பாலு(41) இவருடைய மனைவி இந்திரா (38) உள்ளிட்ட இருவரும் அங்கு வந்து தங்களுடைய வார்த்தை கொன்றுவிட்டு பணத்தை திருடிச் சென்று விட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். அதன் பிறகு அந்த இளைஞரை சித்தி தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மனமடைந்த ருத்ரபதி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனைப் பார்த்த லட்சுமி அதிர்ச்சி அடைந்து அக்கமக்கத்தினரின் உதவியுடன் அவரது மகனை மீட்டு சிகிச்சைக்காக தியாகதுருகம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதோடு இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. அதன்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ருத்ரபதியை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்து பாலு மற்றும் இந்திரா உள்ளிட்ட இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன