fbpx

கனல் கண்ணன் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு… பெரியார் சிலையை உடைக்க வேண்டும் சர்ச்சை பேச்சு..!

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக கனல் கண்ணன் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடத்தல், ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதை தொடர்ந்து புதுச்சேரியில் இருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் கனல் கண்ணனின் முன் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் அவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். கனல் கண்ணனின் ஜாமின் மனு நீதிபதி இளந்திரையன் முன்பு நாளை மறுநாள் விசாரணைக்கு வர இருக்கிறது.

Rupa

Next Post

மக்களே அலர்ட்.. 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

Sat Aug 27 , 2022
தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக கடலோரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், […]

You May Like