fbpx

கர்நாடகாவில் பாஜகவின் பின்னடைவுக்கு காரணம் என்ன….? உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை…..!

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை 119 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆலும் கட்சியான பாஜக 71 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 26 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவதால், கர்நாடக மாநிலத்தில் அந்த கட்சியின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் காணப்படுகிறார்கள். அதே சமயத்தில் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக, பாஜகவின் தொண்டர்கள் சற்று கலக்கம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் கர்நாடக தேர்தல் நிலவரம் தொடர்பாக தலைநகர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். இதற்கு நடுவே குமாரசாமியின் தரப்பை பாஜக அணுக முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

Next Post

உஷாரைய்யா..... உஷாரு...... கர்நாடகத்தில் வெற்றியை நோக்கி காங்கிரஸ்…..! கட்சி தாவலை தடுக்க காங்கிரஸ் தலைமை எடுத்த அதிரடி நடவடிக்கை……! தியானத்தில் அமர்ந்த பிரியங்கா காந்தி…..!

Sat May 13 , 2023
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைப்பதற்கு 113 தொகுதிகளில் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சியை நோக்கி 119 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது அதேநேரம், ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா 71 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி அதிக. தொகுதிகளில் முன்னிலையில் இருந்து […]

You May Like