fbpx

கர்நாடக தேர்தல் முடிவுகள்….! பாஜக எத்தனை தொகுதிகளில் முன்னிலை…..?

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை 8 மணி அளவில் ஆரம்பம் ஆனது. மாநிலம் முழுவதும் 36 மையங்களில் வாக்கு என்னும் பணி நடைபெற்று வருகிறது. 306 அறைகளில் 4256 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், காலை 10 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆலமட்சியான பாஜக 85 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 26 தொகுதிகளிலும், சுயேச்சை உள்ளிட்ட மற்றவர்கள் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறார்கள்.

தலைவர்களைப் பொறுத்தவரையில் வருணா தொகுதியில் சித்தராமய்யாவும், கனகபுரா தொகுதியில் டி.கே. சிவக்குமாரும் முன்னிலையில் இருக்கிறார்கள். அதேபோல சிகோன் தொகுதியில் மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலை வகித்து வருகின்றார்.சிக்மகளூர் தொகுதியில் பாஜக வேட்பாளரான தமிழக பாஜக பொறுப்பாளர் சி டி ரவி பின்னடைவை சந்தித்திருக்கிறார்

Next Post

மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்ததால்…..! கண்ணில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டம் நடத்திய குடும்பம்…..!

Sat May 13 , 2023
மயிலாடுதுறை அருகே திருமங்கலம் மெயின் ரோடு அருகில் இருக்கின்ற சாலையில் முகமது நாசர் என்பவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், தன்னுடைய பெயரில் உள்ள வீட்டை தன்னுடைய குழந்தைகளின் பெயருக்கு அவர் மாற்றி எழுதி வைத்திருக்கிறார். ஆனால் அவருடைய தங்கை ஹனிஸ் பாத்திமா அந்த வீட்டை தனக்கு கொடுக்குமாறு பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த ஒரு சிலருடன் சேர்ந்து மிரட்டியதாக குற்றம் சுமத்தி இருக்கிறார். ஜமாத்தில் […]

You May Like