கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கண்டிவாரா திடலில் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பதவி ஏற்பு விழா நடந்தது. இதில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் முதலில் கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமைய்யா பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை தொடர்ந்து துணை முதலமைச்சராக டி கே சிவகுமார் பதவி ஏற்றுக்கொண்டார்.
கர்நாடக மாநில துணை முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைவராக இருந்த டி.கே சிவகுமார் பதவியேற்றுள்ளார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அவர் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கிலாட் அவரை கட்டி அணைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அதோடு அவரைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் கைகுலுக்கி சிவகுமாருக்கு வாழ்த்து கூறினர். மேலும் எட்டு அமைச்சர்கள் இந்த பதவி ஏற்பு விழாவில் பதவி ஏற்று கொண்டனர். ஆனால் அவர்களுக்கான துறைகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.