பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் வருடம் வெளியான திரைப்படம் கே ஜி எஃப் இந்த திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் 2ம் பாகம் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியானது.
முதல் பாகத்தை விட இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப் பெரிய வெற்றியை சந்தித்தது கேஜிஎப் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் இதுவரையில் கன்னட திரை உலகம் பார்த்திராத வசூல் சாதனையை படைத்தது அதிலும் குறிப்பாக பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் மட்டுமே சுமார் 500 கோடிக்கு மேல் இந்த திரைப்படம் வசூலித்தது.
கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் கிளைமாக்ஸில் கேஜிஎஃப் 3 திரைப்படத்திற்கான அறிவிப்பு ஒன்றை இயக்குனர் கொடுத்திருப்பார். இதன் காரணமாக நிச்சயமாக கேஜிஎப்3 வெளியாகும் என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. இத்தகைய நிலையில் தான் இன்றுடன் கேஜிஎஃப் 2 வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்து இருக்கிறது.
இந்த நிலையில் தான் அதனை கொண்டாடும் விதத்தில் வீடியோ ஒன்றை அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் இறுதியில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் கேஜிஎப்-3 திரைப்படத்திற்கான அறிவிப்பை மறைமுகமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ரசிகர்கள் பயங்கர குஷியில் இருக்கிறார்கள்.