கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு, ராஜ மார்த்தாண்ட பக்த மண்டலி சார்பில் கே.ஜி.எப்., பட பாணியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.
கே.ஜி.எப். படத்திற்கு செட் உருவாக்கிய குழுவினரை வரவழைத்து செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செட்டில் கே.ஜி.எப்., திரைப்படத்தில் உள்ளது போல், காளி உருவம் நிற்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அங்கு உருவாக்கப்பட்டுள்ள குகைக்கு உள்ளே சென்றால் கே.ஜி.எப்., விநாயகர் பிரமாண்டமாக காட்சியளிக்கிறார்.
ராஜ மார்த்தாண்ட பக்த மண்டலி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த செட் பக்தர்களை மிகவும் கவர்ந்துள்ளது. மேலும் இதேபோல் தேன்கனிக்கோட்டையில், பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோலாகலமாக பூஜைகள் நடைபெற்றன.