fbpx

பாலியல் வழக்கில் 4 நாளில் வெளியான அதிரடி தீர்ப்பு…..! மகிழ்ச்சியில் மக்கள்……!

பொதுவாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பாதிக்கப்பட்ட நபர்கள் மிக விரைவாக தண்டனை கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நீதிமன்றமும் ஆண்டு ஆராய்ந்து நிதானமாக தான் தீர்ப்பு வழங்கும்.

ஆனால் அதுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் மனதில் நமக்கு நீதி கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பதற்றம் இருந்து கொண்டே இருக்கும் தற்போது வரையில் நீதித்துறை இப்படித்தான் செயல்பட்டு இருக்கிறது. எந்த ஒரு வழக்கிலும் உடனடியாக நீதி கிடைத்து விடுவதில்லை. அதன் காரணமாக, நீதித்துறையின் மீது மக்களுக்கு ஒரு சின்ன அவநம்பிக்கை இருக்கிறது.

அதனை போக்கும் விதமாக தற்போது கொடைக்கானல் நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது.அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேல்மலை கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பெண் ஒருவர் அந்த பகுதியில் தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வருகின்றார். சென்ற 4ம் தேதி இரவு 7 மணி அளவில் கொடைக்கானலில் இருந்து அவருடைய விடுதிக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது காரில் வந்த மன்னவனூரை சார்ந்த ஜீவா( 22 )மற்றும் பூண்டியைச் சார்ந்த பாலமுருகன் (26) உள்ளிட்ட இருவரும் வழியில் அவரை தடுத்து நிறுத்தி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கி இருக்கிறார்கள்.

இது தொடர்பாக அந்த பெண் கொடைக்கானல் காவல்துறையில் புகார் வழங்கினார். அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் மிக விரைவாக ஜீவா மற்றும் பாலமுருகன் உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு கடந்த 10ஆம் தேதி கொடைக்கானல் இரண்டாவது நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக் வந்தது மிக விரைவாக விசாரணை நடைபெற்றது தொடர்ந்து நீதித்துறை நடுவர் கே கார்த்திக் கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

அதாவது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 323, 354 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு 4 உள்ளிட்ட அவற்றின் கீழ் குற்றவாளிகளான ஜீவா பாலமுருகன் உள்ளிட்ட இருவருக்கும் தல ஏழு வருடம் சிறை தண்டனையும் தலா 20000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் நிரூபிக்கப்பட்டு விட்டது எனவும் கூறப்பட்டிருக்கிறது.

நீதிபதி வழங்கிய தீர்ப்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய நீதிபதி, நம்முடைய சமூகமே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் பெண்கள் பாதுகாப்பாக உணரும் விதத்தில் ஒவ்வொரு ஆணும் பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

இந்த வழக்கில் குறிப்பிடத்தக்க செய்தியாக மிக விரைவாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட 4வது நாளிலும் குற்றம் நிகழ்ந்த 9வது நாளிலும் பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கிடைத்திருக்கிறது அந்த விதத்தில் பொதுமக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் நீதித்துறையின் செயல்பாடு அமைந்திருப்பது பாராட்ட தக்கது.

Next Post

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் வேலை...! 10-ம் வகுப்பு முடித்த நபர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்…!

Sun Feb 19 , 2023
தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த Electrican பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.9,500 வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் வயது இருக்க […]

You May Like