fbpx

குடும்ப பிரச்சினை காரணமாக ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை……! கிருஷ்ணகிரி அருகே சோகம்…..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள கல்லாவி அருகே உள்ள மேட்டுதெருவில் வசித்து வந்தவர்கள் தான் சுரேஷ் மற்றும் அம்மு தம்பதிகள். இரு பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் என்று ஒட்டுமொத்தமாக 5 குழந்தைகள் இந்த தம்பதியினருக்கு இருந்த நிலையில் குடும்ப பிரச்சனை என் காரணமாக, அம்மு மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த மன அழுத்தம் காரணமாக, தன்னுடைய மூத்த 3 குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பின்னர் தன்னுடைய கடைசி 2 குழந்தைகளான சுபிக்ஷா(7), பீஷ்மர்(5) உள்ளிட்ட குழந்தைகளுடன் காலை வேளையில் கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் முன்பு பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இது குறித்த தகவல் அறிந்து கொண்ட ரயில்வே காவல்துறையினர் மற்றும் கல்லாவி காவல்துறையைச் சார்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.அப்போது தற்கொலை செய்து கொண்ட பீஷ்மர் மற்றும் அவருடைய தாய் அம்மு உள்ளிட்டோர் உடல் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதோடு, மகள் சுபிக்ஷாவின் உடல் கிடைக்காததால் அவருடைய உடலை தீவிரமாக தேடி வருகிறார்கள். சம்பவ இடத்தில் இருந்த பெண் குழந்தையின் உடல் உறவினர்களால் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், கல்லாவி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் எடுத்துச் செல்லப்பட்ட தென்னின் உடல் இருப்பு பாதைக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டது.

குடும்ப பிரச்சனையின் காரணமாக, பெண் ஒருவர் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

கள்ளக்காதலை துண்டித்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்……! தென்காசி அருகே பயங்கரம்……!

Tue Mar 7 , 2023
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருக்கின்ற ரெங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா இவருடைய மனைவி சண்முகத்தாய் (70). இவர்களுடைய மகள் மாரியம்மாள் இவர் குருவிகுளம் யூனியன் பாட்டாளி மக்கள் கட்சி மகளிர் அணி தலைவராக இருந்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு நடுவே கடந்த சில தினங்களுக்கு முன்னர் சங்கரன்கோவில் இளவன்குளம் அருகே இருக்கின்ற ரயில்வே தண்டவாளம் அருகே […]

You May Like