சில தினங்களுக்கு முன்னர் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி திடீரென்று தீவிர புயலாக உருமாறி அதன் பிறகு புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து வந்தது.இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. நேற்று இரவு 9 முதல் ஆரம்பமான காற்றின் தாக்கம் இன்று அதிகாலை 3 மணியளவில் சற்றேற குறைய முடிவுக்கு வந்தது, இதற்கு பின்னர் லேசான காற்றே வீசியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் எதிர்வரும் 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருப்பத்தூர், கோவை, தென்காசி, நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அத்துடன் இந்த மாண்டஸ் புயல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, விழுப்புரம், வேலூர், தர்மபுரி, திண்டுக்கல், கொடைக்கானல், திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.