இந்த கோலத்திலா உன்னை பார்க்க வேண்டும் கதறி அழுத தாய்… முன் விரோதம் காரணமா போலீசார் விசாரணை…!

காஞ்சிபுரத்தில் உள்ள செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் 22 வயதான விஜய். இவர் இந்த பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். விஜய்யின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். அதன் பிறகு விஜய் கட்டுப்படுத்த ஆள் இல்லாததால் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் விஜய் அவருடைய தாய் பாஞ்சாலியுடன் எப்பொழுதும், சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனால் செவிலிமேடு பகுதியிலேயே விஜய் தனியாக ஒரு வீடு வாடகைக்கு கொடுத்து அதில் வசித்து வந்திருக்கிறார். விஜய் தனியாக இருந்தாலும் அவரது தாய் அடிக்கடி வந்து மகனை பார்த்துவிட்டு சொல்வார். அதுபோல் மகனை பார்க்க சென்ற பொழுது, நீண்ட நேரம் ஆகியும் மகன், வீட்டுக்கு வெளியே வராததால், வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கே விஜய் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். அதை பார்த்த பாஞ்சாலி மகனின் நிலையை கண்டு கதறி அழுதுள்ளார்.

பாஞ்சாலி கதறிய சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், ஓடி வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் விரைந்து வந்து விஜயின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர், சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்தனர். முன் விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்துள்ளதா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Baskar

Next Post

பிரிந்து போன கணவருடன் ஜாயிண்ட் அடித்த காதலிக்கு, சூப்பர் கிப்ட் அனுப்பிய காதலன்...!

Fri Jul 8 , 2022
சென்னை கொளத்தூரில் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து‌ வரும் 28 வயது இளம்பெண், அவருடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கொளத்தூர் அண்ணா சிலை பகுதியில் உள்ள ஒரு பிரவுசிங் சென்டரில் வேலை பார்த்து வருகிறார்.   அந்த கடையின் உரிமையாளர் அருணாச்சலமும்(28) என்கிற வாலிபரும் திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் அருணாச்சலத்துடன் நெருங்கி பழகி […]

You May Like