fbpx

இணையதள விளையாட்டில் வளர்ந்த காதல் பாகிஸ்தான் பெண்ணை இந்தியாவிற்கு அழைத்து வர இந்திய இளைஞர் போட்ட திட்டம்….! அதிர்ச்சிக்குள்ளான காவல்துறையினர்….?

தற்போது இருக்கக்கூடிய இளம் தலைமுறையினர் இணையதள விளையாட்டுகளிலேயே நாள்தோறும் மூழ்கி இருக்கிறார்கள் இதன் காரணமாக, இளைஞர்கள் இடையே யோசிக்கும் திறன் குறைந்து வருகிறது என்று ஒரு மருத்துவ ஆய்வு சொல்கிறது.

அதேநேரம் இணையதள விளையாட்டுகளில் மூழ்கி இருக்கும் இளைஞர்கள் அந்த விளையாட்டுக்கள் மூலமாக பலரிடம் பேசி பழகுகிறார்கள் அதோடு, பலர் இந்த இணையதள விளையாட்டின் மூலமாக தங்களுடைய வாழ்க்கை துணை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு கூட சென்று விடுகிறார்கள்.

இந்த இணையதள விளையாட்டுக்கள் மூலமாக பல காதல்கள் வளர்ந்து இருக்கின்றனர். ஆனால் அதில் ஒரு சில காதலர்கள் மட்டுமே கைகூடி இருக்கிறது.

அந்த வகையில், சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வந்த பாகிஸ்தானை சார்ந்த ஒரு பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

சென்ற வருடம் செப்டம்பர் மாதம் முதல் சட்ட விரோதமாக இந்தியாவை சார்ந்த ஒரு இளைஞரும், பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் தங்கி இருந்தனர். அந்த இளைஞரின் பெயர் மலாயம் சிங் யாதவ் என்று கூறப்படுகிறது. அவர் பெங்களூருவில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

அவர் இணையதள விளையாட்டுகளில் மூழ்கியிருந்த போது இக்ரா ஜிவானி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண் பாகிஸ்தான் நாட்டை சார்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.

அவர்கள் இருவரும் காதலித்து போலியான ஆவணங்களை தயார் செய்து இருவரும் ஒன்று சேர்ந்து வாழ, அந்த பெண்ணை இந்தியாவிற்கு அழைத்து வர அந்த இளைஞர் திட்டம் தீட்டினார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையின் வட்டாரத்தில் தெரிவித்ததாவது, அந்த நபர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இணையதளத்தின் மூலமாக லூடோ விளையாடுவார் என்று கூறப்படுகிறது. சென்ற வருடம் அவருக்கு பாகிஸ்தானை சார்ந்த ஒரு மைனர் பெண்ணுடன் தொடர்பு உண்டானது.

சமீபத்தில் அவர் தன்னுடைய பாகிஸ்தானிய காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக அந்த பெண்ணை பெங்களூரு நகரத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அந்த பெண்ணை நேபாளம் மூலமாக இந்தியாவிற்கு அழைத்து வர அந்த இளைஞர் திட்டம் வகுத்துள்ளார். இருவரும் பெல்லந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூலி தொழிலாளிகள் குடியிருப்பில் வசித்து வந்தனர் என்று கூறப்படுகிறது. அந்த பெண்ணை வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள் என்று டி சி பி எஸ் க்ரிஷ் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், அந்த இளைஞர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் ஐபிசி பிரிவுகள் 420, 495, 468 மற்றும் 471 உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த தம்பதியர் வசித்து வந்து சொத்தின் உரிமையாளரான கோவிந்த ரெட்டி மீதும் வெளிநாட்டினர் சட்டம் பிரிவு 7ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தன்னுடைய சார்ஜா பூர் சாலை வளாகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த அந்த சிறுமியின் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் வழங்கப்படாததால் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அந்த பெண் பாகிஸ்தானின் ஹைதராபாத்தை சார்ந்தவர் என்பது இந்த இளைஞருக்கு முதலில் தெரியவில்லையாம்.

ஆனாலும் கூட அவருக்கு அந்த விஷயம் தெரிந்த உடன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார். யாதவ் மற்றும் அந்த மைனர் பெண் உள்ளிட்டோர் நேபாள நாட்டின் காத்மாண்டுவில் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்வுக்கு பின்னர் தம்பதியர் இருவரும் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி இந்தியா மற்றும் நேபாள எல்லையின் மூலமாக இந்தியாவிற்கு நுழைந்திருக்கிறார்கள்.

அதன் பிறகு தம்பதியர் இருவரும் ஆதார் அட்டையை போலியாக தயார் செய்து அந்த சிறுமியின் பெயரை ரவா யாதவ் என்று மாற்றிவிட்டனர் என்று சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

ஐயோ என் மானமே போச்சு….!, பாஜக நிர்வாகியால் பள்ளி மாணவி கதறல், போக்சோ சட்டம் பாய்ந்தது ….!

Tue Jan 24 , 2023
முன்பெல்லாம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூக விரோத செயல்களில் சமூக விரோத கும்பலை சார்ந்தவர்கள் தான் ஈடுபட்டு வந்தார்கள்.ஆனால் தற்சமயம் பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்களும், முக்கிய அரசியல் கட்சியில் பிரமுகராக இருப்பவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபட தொடங்கி விட்டார்கள்.இவ்வளவு ஏன் முன்னாள் அமைச்சர்களும் கூட இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த வகையில், திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தான் வினோத் (26) இவர் பாரதிய ஜனதா […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like