சமீபத்தில் வங்ககடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது, இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சேதங்கள் அதிகரித்திருக்கின்றன.
இந்த நிலையில், இந்த புயல் கடந்த 9ம் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. சென்னை மாமல்லபுரத்தில் நள்ளிரவு 2 மணியளவில் இந்த புயல் கரையை கடந்தது. ஆனாலும் புயல் கரையை கடந்த பின்னரும் ஓரிரு தினங்கள் தமிழகத்தில் மழை பெய்த வண்ணம் தான் இருந்தது.
இந்த நிலையில் தான் சென்ற 2 நாட்களாக தமிழகத்தில் மழை சற்று ஓய்வு வழங்கியிருந்தது. ஆனால் தற்போது மறுபடியும் உருவாகும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழகத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில், இந்திய பெருங்கடல், தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடலில் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று மேலும் வலுவடைவதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருக்கிறது.
அத்துடன் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக மேற்கு திசை நோக்கி நகர்ந்து, நாளை மறுதினம் வரையில் தீவிர நிலையிலையே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, வருகின்ற 19ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. ஆகவே கடலூர் மீனவர்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மாவட்ட மீன்வளத்துறை சார்பாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.