fbpx

2வது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…..! பெற்ற மகனையே கொடூரமாக கொலை செய்த தந்தை…..!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் நேதாஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லிம்போடி பகுதியில் 2வது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு நபர் தன்னுடைய 7 வயது மகனை கொலை செய்ததாக அந்த மாவட்ட காவல்துறை தெரிவித்திருக்கிறது.

உயிரிழந்த சிறுவன் பிரதீக் முண்டே என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர் 26 வயதான சசிபால் முண்டே என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. வந்திருக்கிறது. மேலும் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து பிரதீக் உறவினர் ராஜேஷ்முண்டே என்பவர் தெரிவித்ததாவது, எனது தம்பியின் மகன் பிரதீப் முந்தேவின் தாய் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்டதால் பிரதீப் தந்தையும் என்னுடைய தம்பிமான சசிபால் முன்னே வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு பிரதீக் குறித்து சசி பாலுடன் அப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறியுள்ளார்.

அத்துடன் நேற்று முன்தினம் காலை பிரதீக்கை தன்னுடைய தாய் மயங்கி நிலையில், கண்டதாகவும் அதன் பிறகு தங்களுக்கு தகவல் கொடுத்ததாகவும், அந்த சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், கூறியிருக்கிறார். ஆனால் அங்கே அந்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர் என்பதையும் பிரதீக்கின் சித்தப்பா தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுவனின் உயிரிழப்பில் தன்னுடைய சகோதரர் சசி பாலுக்கு நிச்சயமாக தொடர்பு உள்ளதாகவும், ராஜேஷ் முண்டே குற்றம் சுமத்தி இருக்கிறார். இன்னொருபுறம் காவல் ஆய்வாளர் எம் எஸ் தன்மார் தெரிவித்ததாவது முதல் கட்ட விசாரணையில், பிரதீக் அடித்து கொலை செய்யப்பட்டது. தெரிய வந்திருப்பதாக கூறி இருக்கிறார். அதோடு, உறவினர்கள் தெரிவித்ததாவது, பிரதீக் தன்னுடைய தந்தையால் கொலை செய்யப்பட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தி இருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

உறவினர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றம் சுமத்தப்பட்ட சசிபால் முண்டேவை காவல்துறையினர் கைது செய்வதற்காக அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமத்தப்பட்டவரை பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு நேதாஜி நகர் காவல் துறையினர் அந்த பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

Next Post

உடல் ஆரோக்கியம் சரியாக நிர்வாண பூஜை..!! பெற்றோரிடம் பேரம் பேசிய போலி சாமியார்..!! பதறிய இளம்பெண்..!! நடந்தது என்ன..?

Wed May 17 , 2023
ஆந்திராவில் இளம்பெண்ணிற்கு நிர்வாண பூஜை செய்ய முயன்ற போலி சாமியார் கைது செய்யப்பட்டார். ஆந்திரா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டூர் பகுதியில் சிறுமிகளை அழைத்து வந்து நிர்வாண பூஜை செய்ததாக கூறி ஒரு லட்சம் தருகிறோம் என கூறிய பதினைந்து பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது அதே போல் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் ரேணிகுண்டா பகுதியில் உடல் ஆரோக்கியம் […]

You May Like