fbpx

தலைமை ஆசிரியர் கலந்தாய்வுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தடை…..! காரணம் என்ன….?

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோசப் அமுல்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன் இதன் காரணமாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு நான் முழுமையான தகுதி பெற்றுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

இத்தகைய நிலையில், டிஇடி தேர்வில் தேர்ச்சி பெறாத நபர்களுக்கு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதற்காக மாநில அளவிலான பொது கலந்தாய்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக என்னை போன்ற நபர்களின் பதவி உயர்வுக்கான வாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவின் தகுதியானவர்களை கொண்டு பதவி உயர்வுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் டி இ டி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கும் தகுதி தொடர்பாக கொள்கை முடிவு மேற்கொள்ள வேண்டும். மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக இரண்டு வாரங்களில் கல்வி துறை சரியான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் அது வரையில் கலந்தாய்வு நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

Next Post

அங்கன்வாடி பணியாளர்களுக்கு கோடை விடுமுறை..!! அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

Sun May 7 , 2023
அங்கன்வாடி பணியாளர்களுக்கு மே 10ஆம் தேதி முதல் 15 நாட்கள் கோடை விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறை காலத்தில் ஒவ்வொரு வாரமும் சுழற்சி முறையில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை மாற்றி தற்போது சமூக நலத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மே மாதம் தொடங்கியது முதல் 50 சதவீத குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடிக்கு வருகை தருவதாக குழந்தைகள் வளர்ச்சிப் […]
அங்கன்வாடி பணியாளர்களுக்கு கோடை விடுமுறை..!! அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

You May Like