சென்னை வளசரவாக்கம் பகுதியில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்த். இவர் சென்ற 8ம் தேதி வீட்டின் முன் உள்ள சாலையில் காரை நிறுத்திவிட்டு சென்றார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மறுபடியும் காரை எடுப்பதற்காக வந்து பார்த்தபோது, அந்த காரின் பின் இருக்கையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சிக்கு ஆளானார்.
இது தொடர்பாக, அவர் வழங்கிய புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். முதல் கட்ட விசாரணையில், அரவிந்த் கார் கதவை பூட்டாமல் சென்றிருப்பதும், அதனை பயன்படுத்தி இறந்து போன நபர் காருக்குள் சென்று இருப்பதும் தெரிய வந்தது. அதே சமயத்தில், அவர் எவ்வாறு உயிரிழந்தார்? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.