கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாதன் (25) இவர் இணையதளம் மூலமாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல காட்டுமன்னார்கோவில் வசந்தம் நகர் பகுதியில் உணவு டெலிவரி செய்வதற்காக சென்று உள்ளார்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் பத்மநாபனின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அவர் வைத்திருந்த பெட்டியின் உணவு மற்றும் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், காவல்துறையினர் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சாவை வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக கடத்தி வந்து உணவு டெலிவரி மூலமாக செய்து வருவதற்காக இதனை தொடர்ந்து காவல்துறையினர் பத்மநாதனை கைது செய்தனர்.