fbpx

திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த காதலியை கொடூரமாக கொலை செய்த இளைஞர்……!

பெங்களூருவில் ஒரு இளைஞர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த காதலியை பலமுறை கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார். கொலை செய்யப்பட்ட 25 வயது இளம்பெண் லீலா பவித்ரா நலமதி ஆந்திர மாநிலத்தில் காக்கிநாடாவைச் சார்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இவர் பணி நிமித்தமாக பெங்களூருக்கு வந்திருக்கிறார். மேலும் அவர் முருகேஷ் பாளையா என்ற பகுதியில் இருக்கின்ற தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார் வீணாவை கொலை செய்த தினகர் பனாகும் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தை சேர்ந்தவர் 28 வயதாகும் இவரும், பெங்களூரில் இருக்கின்ற டொம்லூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், தினகரன் வீலாகும் 5 வருடங்களுக்கு முன்னர் காவலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள். இருந்தாலும் மணமகன் வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

அப்போது லீலா தினகரிடம் திருமணத்திற்கு தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சம்மதிக்க மாட்டார்கள் எனவும், குடும்பத்தின் முடிவுக்கு தான் கட்டுப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக, காதலி திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கொண்ட தினகர் கடந்த செவ்வாய்க்கிழமை லீலா பணியாற்றும் அலுவலகத்திற்கு சென்று வாசலில் காத்துக் கொண்டிருந்திருக்கிறார். இரவு 7:30 மணி அளவில் லீலா வேலை முடிவடைந்து வெளியே வந்தவுடன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்போது கோபத்தின் உச்சக்கட்டத்தில் இருந்த தினகர் திடீரென்று தன்னிடமிருந்து கத்தியை எடுத்து பலமுறை லீலாவை குத்தி இருக்கின்றார். பொது இடத்தில் எல்லோருடைய பார்வையின் முன்னிலையில், இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது இது தொடர்பாக தகவல் அறிந்த ஜீவன் பீமா நகர் காவல் துறையைச் சார்ந்தவர்கள் விரைந்து வந்து தினகரை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Post

முதலமைச்சரின் 70வது பிறந்த நாள்…..! வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திரமோடி…..!

Wed Mar 1 , 2023
திமுகவின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான ஸ்டாலின் சென்னை மெரினாவில் இருக்கின்ற அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு தன்னுடைய தந்தையும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, முயற்சி, முயற்சி, முயற்சி அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது. […]

You May Like