திருவாரூர் மாவட்டம் காவாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கொரடாச்சேரியை சேர்ந்த துரை என்பவரிடம் 1,50000 ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். இத்தகைய சூழ்நிலையில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார் சிலம்பரசன் ஆனால் மீதம் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், துரை 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக சொல்லப்படுகிறது. ஆகவே சிலம்பரசன் இன்று தன்னுடைய குடும்பத்தினருடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார் அப்போதும் திடீரென்று சிலம்பரசன் மட்டும் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடலில் மண்ணென்ணையை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
இதனைக் கண்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
கந்து வட்டியின் கொடுமையின் காரணமாக கடந்த 2017 ஆம் வருடம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். 4 பேர் ஆட்சியர் அலுவலகத்திலேயே மரணமடைந்த நிலையிலும் தற்போது வரையிலும் இந்த கந்து வட்டி கொடுமை முடிவுக்கு வரவில்லை என்று கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள்,இந்த விவகாரத்தில் அரசியல் சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.