முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று அங்கு ஆய்வை மேற்கொண்டார். அங்கே கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியக பணிகளை அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அத்துடன் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூருக்கு சென்று அதன் நினைவுகளை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிலையில் தான் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருக்கின்ற பள்ளிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 4ம் தேதி ஆய்வு நடத்துகிறார் என்று கூறப்படுகிறது.
ஆகவே அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் மேற்க்கண்ட 5 மாவட்டங்களில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. திங்கள்கிழமை அட்டவணையின் அடிப்படையில் பள்ளிகள் இயங்கும் எனவும், அதற்கு பதிலாக மார்ச் மாதம் 13 ஆம் தேதி விடுமுறை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.