மயிலாடுதுறை அருகே திருமங்கலம் மெயின் ரோடு அருகில் இருக்கின்ற சாலையில் முகமது நாசர் என்பவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், தன்னுடைய பெயரில் உள்ள வீட்டை தன்னுடைய குழந்தைகளின் பெயருக்கு அவர் மாற்றி எழுதி வைத்திருக்கிறார்.
ஆனால் அவருடைய தங்கை ஹனிஸ் பாத்திமா அந்த வீட்டை தனக்கு கொடுக்குமாறு பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த ஒரு சிலருடன் சேர்ந்து மிரட்டியதாக குற்றம் சுமத்தி இருக்கிறார். ஜமாத்தில் தங்கள் தொடர்பாக அவதூறு தெரிவித்ததால், திருமங்கலம் பள்ளிவாசலுக்கு செலுத்த வேண்டிய பணத்தை வாங்க மறுத்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் சொத்து பிரச்சனையில் ஊர் முக்கியஸ்தர்கள் உத்தரவுப்படி நடந்து கொண்டால் தான் பள்ளிவாசலுக்கு வரி வாங்கிக் கொள்வோம், இல்லை என்றால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என்று மிரட்டுவதாக புகார் வழங்கி குடும்பத்தினருடன் கண்ணில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு ஆர்டிஓவிடம் புகார் மனுவை வழங்கினார்.