விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பல்வேறு திருப்பங்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றன.
இந்த நெடுந்தொடர் தொடக்கத்தில் அண்ணன் தம்பி பாசப்பிணைப்பு மற்றும் கூட்டுக் குடும்பத்தின் அத்தியாயமாக தொடங்கப்பட்டது ஆனால் தற்போது இதன் கதை வேறு ஒரு பரிமாணத்தை அடைந்திருக்கிறது.
இந்த தொடரில் தற்சமயம் மீனாவின் தங்கை நிச்சயதார்த்தத்திற்காக மூர்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் அங்கு சென்று இருக்கிறார்கள் ஆனால் அவர்களை மீனாவின் தந்தை மிக மோசமாக அசிங்கப்படுத்தி விடுகிறார்.
தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்த எல்லோரையும் மீனா சாப்பிட அமர வைத்து விட்டு சென்று விடுகிறார் அப்போது அங்கே வரும் மீனாவின் தந்தையான ஜனார்த்தனன் அவர்களை அசிங்கமாக பேசி விடுவதால் அவர்கள் கோபத்தில் எழுந்து சென்று விடுகிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக அதன் பிறகு மீனாவிற்கு தெரிய வர இதனைக் கேட்டு ஆத்திரப்படும் மீனா தன்னுடைய அப்பாவிடம் சென்று வாக்குவாதம் செய்கிறார் இந்த குடும்பம் தங்களை என்ன செய்தது நீங்கள் அவர்களை அசிங்கப்படுத்தவில்லை என்னை அசிங்கப்படுத்தி இருக்கிறீர்கள் உங்கள் மகள் திருமணத்திற்குள் அவர்களிடம் நீங்கள் அவர்களிடம் வந்து நிற்பீர்கள் என்று சவால் விட்டுவிட்டு சென்று விடுகிறார்.