தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் இருக்கின்ற கரையாளர் தெருவை சேர்ந்தவர் தங்கையா. இவருக்கு 45 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். அவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் தாய் தந்தையர் மரணம் அடைந்துவிட்ட நிலையில் அவர் மட்டும் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்,அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வசித்து வந்த பாழடைந்த வீட்டில் இன்று அதிகாலை அந்த பெண் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கோட்டை காவல்துறையினர் உயிரிழந்த அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை மீட்டு பிரயோத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவர்கள் அந்தப் பெண்ணின் உடலை பரிசோதனை செய்தபோது உயிரிழந்த பெண்ணின் உடலில் ரத்த காயங்கள் அதிகமாக இருந்ததும், அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இருந்ததும் தெரியவந்தது. ஆகவே மேல் திரையிட பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அந்த பெண்ணின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு நடுவில் சம்பவ இடத்திற்கு விரைந்த தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அதோடு, இந்த சம்பவம் குறித்து செங்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த நபர் யார் என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.