தமிழகத்தில் அரசின் சார்பாக ஏராளமான அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. அதில் பத்தாயிரத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணிகளில் சேர்வதற்கு D, Ted படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல கலப்புத் திருமணம், மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவைப் பெண்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை மிக விரைவில் நிரப்ப வேண்டும் என்று தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த பணியிடங்களில் விண்ணப்பம் செய்வதற்கு கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையெழுத்து, தகுதி சான்றிதழ், விண்ணப்ப கடிதம், அனுபவச் சான்றிதழ், விதவைச் சான்றிதழ் மற்றும் குடியிருப்புச் சான்றிதழ்கள் தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த காலிப் பணியிடங்கள் எழுத்து தேர்வு நேர்காணல் ஆவண சரிபார்ப்பு மற்றும் இறுதி தகுதி பட்டியல் உள்ளிட்டவற்றின் மூலமாக தேர்வு செய்யப்படும் இதற்கு icds.tn.nic என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பம் செய்யலாம். அதே சமயம் இந்த பணியில் இணைந்தால் மாதம் 6500 முதல் பணிக்கு ஏற்றார் போல சம்பளம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்து இருக்கிறது.