fbpx

2 பச்சிளம் குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை….! பெரம்பலூர் அருகே சோகம்….!

வாழ்வில் எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் தெளிவாக யோசிக்கும் திறன் ஒருவருக்கு இருந்து விட்டால் அவர் நிச்சயமாக எப்படிப்பட்டான சூழ்நிலையையும் சமாளித்து விடுவார்.ஆனால் அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசிக்க முடியாத மனநிலையில் இருக்கும் நபர் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை உள்ளிட்ட விபரீத முடிவுகளை மேற்கொள்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே இருக்கின்ற பெண்ணகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி அவர்களுக்கு வினோத்குமார், விஜயகுமார் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.

இதில் வினோத்குமாருக்கு ப்ரியா என்ற மனைவியும், விஜயகுமாருக்கு ஜெயா என்ற மனைவியும் இருந்தார். இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.மேலும் நிகிதா, நிகிஷா என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் தான் கடந்த சில மாதங்களாக கடலூர் மாவட்டம் தொழுதுர் கிராமத்தில் இருக்கின்ற பெற்றோர் வீட்டில் வசித்து வந்த ஜெயா ஒரு வாரத்திற்கு முன்பாக பெண்ணைக்கோணம் கிராமத்திற்கு குழந்தைகளுடன் வந்துள்ளார். அப்போது வீட்டில் இருக்கின்ற அறையில் நேற்று முன்தினம் உறங்கிக் கொண்டிருந்த ஜெயா குழந்தைகளுடன் காலை எழுந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகத்திற்குள்ளான உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஜெயா மின்விசிறியில் தன்னுடைய சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக கிடந்தார்.

அதோடு 2️ பெண் குழந்தைகளான நிக்கிதா (2) நிகிஷா (2) உள்ளிட்ட குழந்தைகள் இருவரும் வாயில் நுரை தள்ளியவாறு பிணமாக கிடந்தனர்.இது தொடர்பாக தகவல் அறிந்த மங்களமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரட்டி பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்த பிறகு, ஜெயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அத்துடன் தற்கொலைக்கான காரணம் என்னவென்பது உடனடியாக தெரியவில்லை.ஆனாலும் கூட, ஜெயாவின் தந்தை செல்வராஜ் தன்னுடைய மகளின் மாமியார் தமிழ்ச்செல்வி, மருமகனின் அண்ணன் வினோத்குமார் மற்றும் அவருடைய மனைவி பிரியா உள்ளிட்டோர் மீது சந்தேகம் உள்ளதாக மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.அதனை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறை அவர்களிடம் விசாரணை நடத்தியது இந்த சம்பவம் காரணமாக பெண்ணகோனம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது

Next Post

“இவர்களை பற்றி மக்கள் படிக்க வேண்டும்..” 2023-ன் முதல் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு..

Sun Jan 29 , 2023
‘பத்ம’ விருதுகள் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி படிக்குமாறு நாட்டின் குடிமக்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். 2023 ஆம் ஆண்டின் முதல் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ பழங்குடியின மக்கள், ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள் – பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் எழுச்சியூட்டும் கதைகளைப் படிக்குமாறு அனைத்து நாட்டு மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். […]

You May Like