கணவன் மனைவிக்குள் அன்பு இருப்பது மிகவும் அவசியம்தான், ஆனால் அதே அன்பு ஒரு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டால் பல விபரீதங்களை சந்திக்க நேரலாம்.பலர் மனைவியின் மீது அன்புடன் இருப்பதாக நினைத்துக் கொண்டு மனைவிமார்களை பல சமயங்களில் சங்கடங்களில் ஆழ்த்தி வருகிறார்கள்.
அந்த வகையில், திருச்சி திருவானைக்காவல் ஐயப்பன் வெட்டி தெருவில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் லட்சுமணன், அவருடைய மனைவி வசந்தா(68). இந்த தம்பதியினரின் ஒரே மகன் கார்த்திகேயன்(35). கார்த்திகேயன் தஞ்சையை சேர்ந்த வசந்த பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு சாமிநாதன்(8) என்ற மகன் இருக்கிறார். சென்ற 5 வருடங்களாக துபாயில் கார் ஓட்டுநராக பணிபுரிந்த கார்த்திகேயன், சென்ற 3 நாட்களுக்கு முன்பு தான் நாடு திரும்பி உள்ளார். இவர் தன்னுடைய மனைவியின் மீது அதீத அன்பு கொண்டிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
ஆகவே தன்னுடைய மனைவி என்ன செய்கிறார் என்று அவ்வப்போது தொடர்ந்து கண்காணித்து கொண்டிருந்தார் கார்த்திகேயன் என்றும் சொல்லப்படுகிறது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தாலும் மனைவி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை கண்காணிக்க பெட்ரூம் உட்பட பல பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராவை பொறுத்திருந்தார் கார்த்திகேயன் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் கார்த்திகேயன் மனைவியின் மீது கொண்ட அன்பின் காரணமாக, அவரை தொடர்ந்து கண்காணித்து வந்ததாக சொல்லப்பட்டாலும், தன்னுடைய கணவன் சந்தேக கண்ணுடன் இருப்பதாக நினைத்த வசந்த பிரியா கார்த்திகேயனை கண்டித்து இருக்கிறார். ஆகவே அவர் துபாயிலிருந்து திரும்பிய பின்னர் கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தான் எப்போதும் போல காலை கார்த்திகேயன் வசந்த பிரியாவை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விட்டு வந்திருக்கிறார். மதியத்திற்கு பின்னர் வசந்த பிரியா வீட்டிற்கு ஃபோன் செய்த போது யாரும் எடுக்கவில்லை. பலமுறை போன் செய்தும் யாரும் எடுக்காததால் வசந்த பிரியா கோபமடைந்து விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அண்டை வீட்டாரிடம் இது தொடர்பான தகவலை தெரிவித்து இருக்கிறார் வசந்த பிரியா. உடனடியாக அண்டைவீட்டாரும் மாலை முதல் பூட்டப்பட்ட கதவு வெகு நேரம் ஆன பின்னரும் திறக்கப்படவில்லை என்பதை தெரிந்து கொண்டுள்ளனர். போனில் அழைத்தும், கதவை தட்டியும் எந்த விதமான பதிலும் கிடைக்காததால் பதற்றமடைந்த அண்டை வீட்டார்கள் ஸ்ரீரங்கம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கினர்.
இந்த தகவலினடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீரங்கம் காவல்துறையை உதவி ஆணையர் நிவேதிதா தலைமையிலான காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கழுத்து, 2 கைகளில் மணிக்கட்டு அருந்த நிலையில், கார்த்திகேயன் மின்விசிறியிலும், பீரோ கைப்பிடியில் வசந்தாவும், கதவின் பின்புறம் உள்ள கொக்கியில் சாமிநாதனும் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தனர்.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான காவல்துறையினர் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய் வசந்தாவையும், மகன் சாமிநாதனையும் தூக்கிட்டு கொலை செய்துவிட்டு, அதன் பிறகு கார்த்திகேயன் தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் யூகித்துள்ளனர்.
அத்துடன் உயிரிழப்பதற்கு முன்னர் கார்த்திகேயன் எழுதி வைத்த கடிதத்தில் என்னுடைய இறப்புக்கு யாரும் காரணமில்லை. எனக்கு பின்னர் என்னுடைய தாயும், மகனும் துன்பப்படுவார்கள் என்பதால் இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன்.என் மனைவி படித்திருப்பதால் அவருடைய வாழ்க்கையை அவள் பார்த்துக் கொள்வாள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் கார்த்திகேயன் ஏன் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்தார் என்று யோசித்துப் பார்த்தால் தன்னுடைய மனைவி வசந்த பிரியா தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டாரா? என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
ஒருவேளை கார்த்திகேயன் தான் மீண்டும் துபாய்க்கு செல்ல நேரிட்டால் அதன் பிறகு வசந்த பிரியா ஏதாவது ஒரு தவறான முடிவை எடுத்து விட்டால், தன்னுடைய மகனும், தாயும் கவனிக்க ஆளில்லாமல் துன்பப்படுவார்கள் என்று நினைத்து இது போன்ற முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் மூவர் மரணம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக. ஒரே குடும்பத்தைச் சார்ந்த தாய். மகன், பேரன் என்று 3 பேர் உயிரிழந்த சம்பவம் ஸ்ரீரங்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.