fbpx

கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவன் படுகொலை! கள்ளக்காதலன் அதிரடி கைது!

மனிதராக இருக்கும் எல்லோருக்கும் பிரச்சனை வருவது இயல்பு அந்த பிரச்சனையை எப்படி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் யோசித்து தான் செயல்பட வேண்டும். அவ்வாறு யோசித்து செயல்பட்டால் தடுக்க முடியாவிட்டாலும் வரப்போகும் இழப்புகளை குறைப்பதற்கான வாய்ப்பு உண்டு.

ஆனால் அதைத் தவிர்த்து ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிட்டால் முன் பின் யோசிக்காமல் கோபப்பட்டு ஏதாவது ஒரு செயலை செய்து விட்டால், அதன் பின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

திருநெல்வேலி மாவட்டம் மலையடிகுறிச்சியை சேர்ந்தவர் வேல்துரை(33). இவர் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் இருக்கின்ற தனியார் நிறுவனம் ஒன்றில் பெயிண்டர் ஆக வேலை செய்து வருகின்றார். நேற்று முன்தினம் இரவு இவர் பணிபுரியும் இடத்திற்கு வந்த ஒரு நபர் திடீரென்று வேல்துரையை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்று விட்டார். இதனால் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக கிண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல் துறையினரின் விசாரணையில் வேல்துறையை கொலை செய்தது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த வீரபுத்திரன்(37)தான் என தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் தான் தலைமறைவாக இருந்த வீரபுத்திரனை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். வேல்துரையின் மனைவியுடன் வீரபுத்திரன் தகாத உறவில் இருந்து வந்ததாகவும், ஆகவே இந்த விவகாரத்தால் வேல்துரை கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Next Post

நேபாளத்திற்கு சென்ற தமிழக விளையாட்டு வீரர் மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழப்பு! சோகத்தில் கிராம மக்கள்!

Tue Dec 27 , 2022
தமிழகத்தை பொறுத்தவரையில் பல சாதனையாளர்கள் கிராமத்தில் இருந்தே உருவாகிறார்கள். ஆனால் அப்படி கிராமத்தில் இருக்கும் திறமை மிக்கவர்கள் பெரிய அளவில் ஜொலிப்பதில்லை. காரணம் அவர்களிடம் திறமை இருந்தாலும் அந்த திறமை அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அப்படி திறமை அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் பிரபலமடைந்தால் பணம், அதிகாரம் உள்ளிட்டவற்றை கையில் வைத்திருக்கும் ஒரு சிலரால் அவர்கள் பழிவாங்கப்படுவது அவ்வப்போது நடைபெற தான் செய்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ்(27). […]

You May Like