நாகப்பட்டினம் மாவட்டம் துறைமுக வளாகத்தில் இந்திய கடற்படை முகாம் ஒன்று இருக்கிறது. இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது விடுதலை புலிகள் அமைப்புக்கு பொருட்களை கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக இந்த முகாம் ஏற்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இங்கே கமெண்ட் தலைமையில் 50க்கும் அதிகமான வீரர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இத்தகைய நிலையில், இந்த முகாமுக்குள் நேற்று அதிகாலை 3 45 மணியளவில் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. ஆகவே வீரர்கள் அங்கு சென்று பார்த்தபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் வட்டம் காமாட்சி அம்மன் பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் (28) என்ற வீரர் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார்.
இன்சாஸ் ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட அவர் அந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சூட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது. வழங்கிய தகவலின் அடிப்படையில் நாகை மாவட்ட காவல்துறையின் துணை கண்காணிப்பாளர் பழனிசாமி நாகப்பட்டினம் நகர காவல் துறை ஆய்வாளர் சுப்ரியா மற்றும் காவல் துறையினர் கடற்படை முகாமுக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதோடு ராஜேஷின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுகுறித்து நாகை நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டில் கடற்கரையில் இணைந்த ராஜேஷ் 2021 ஆம் ஆண்டு முதல் நாகை மாவட்ட கடற்படை முகாமில் பணியாற்றி வந்தார் என்று கூறப்படுகிறது. ராஜேஷுக்கு இலக்கியா என்ற மனைவியும் 6 மாத பெண் குழந்தையும் இருக்கின்றன.