கடந்த வருடம் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த கண்மணியும், சின்னத்திரை நடிகர் நவீனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்றது என்பது எல்லோருக்கும் தெரியும்.
இத்தகைய சூழ்நிலையில் தான் அவர்கள் தங்களுடைய முதல் குழந்தையை பெற்றுக்கொள்ள இருப்பதாக முன்பே மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். இதன் காரணமாக, ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில், தற்போது கண்மணிக்கு வளைகாப்பு நடைபெற்று முடிந்து இருக்கிறது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படங்களை தற்போது ரசிகர்கள் பார்த்து வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்.