நடிகை நயன்தாராவிற்கு தொடர்ந்து சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இரட்டை குழந்தைகள் மூலமாக ஏற்பட்ட சர்ச்சை, அதன் பிறகு நயன்தாரா சோலோ கதாநாயகியாக நடித்த சிலை திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. 3வது விக்னேஷ் சிவனுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு கைநழுவி போனது.
இப்படி நயன்தாராவிற்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே உள்ளது என்று கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில் தான் இவை எல்லாவற்றையும் தாண்டி மற்றொரு பெரிய வாய்ப்பு நயன்தாராவின் கைநழுவிப்போய் இருப்பதாக கூறப்படுகிறது. நடிகையின் நயன்தாரா பிரபல தயாரிப்பாளர் தயாரிப்பில் 2 திரைப்படங்களில் நடிப்பதாக ஒப்பந்தமாக இருந்தார்.
20 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருந்த நிலையில், அதற்கான முன் தொகையும் நயன்தாராவிற்கு வழங்கப்பட்டது. 2 திரைப்படத்திற்கும் நயன்தாராவால் தற்சமயம் கால் சீட் கொடுக்க முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறதாம்.
இதன் காரணமாக, நயன்தாராவை இந்த திரைப்படத்திலிருந்து விலக்கிவிட்டு தான் கொடுத்த முன் தொகையையும் அந்த தயாரிப்பாளர் வாபஸ் பெற்றுக் கொண்டாராம். இந்த 2 திரைப்படங்கள் கைநழுவி போய்விட்டதால் 20 கோடி ரூபாய் சம்பளத்தை இழந்துள்ளார் நயன்தாரா. இந்த தகவல் தான் தற்சமயம் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.