செங்கல்பட்டு மாவட்டம் திம்மா வரத்தில் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை இடமாக பேராயம் செயல்பட்டு வருகிறது.
இந்த பேராயத்திற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சொத்துக்கள் இருக்கின்றன. இந்த சொத்துக்களை கடந்த 2009ம் வருடம் முதல் 2014ஆம் ஆண்டு வரையில் புதுக்கோட்டை மாவட்டம் மைக்கல் பட்டியை சேர்ந்த பாதிரியார் சிரில் ராஜ் என்பவர் நிர்வகிக்கவும் பராமரிப்பதற்கு நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தான் இவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி பேராயத்துக்கு சொந்தமான படூர் தையூர் இருமலையூர் புனித தோமையார் மலை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கின்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை சட்டவிரோதமாக பேராயத்தின் அனுமதி பெறாமல் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஜார்ஜ் ஸ்டீபன் தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சிரில் ராஜ்குமார் 66 பேருக்கு சாப்பிட்ட விரோதமாக ரூபாய் 11.68 கோடி நிலங்களை விற்பனை செய்துள்ளார். என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவரை கைது செய்த குற்ற பிரிவு காவல் துறையினர். தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.