மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற படிப்புகளுக்கு நீட் தேர்வை தகுதியாக வைத்து சட்ட விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் சபரீஷ் சுப்பிரமணியன் தாக்கல் செய்திருக்கின்ற மனுவில் நீட் தேர்வு அறிமுகம் மற்றும் அதனை தொடர்வது உள்ளிட்டவை தமிழகத்தின் கிராமப்புற மாணவர்களை பாதிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
நீட் தேர்வை அறிமுகம் செய்தது கூட்டாட்சி கட்டமைப்பை மீறுவதாக இருப்பதாகவும், மருத்துவக் கல்லூரிகளில் அரசு இடங்களில் மாணவர்களை அனுமதிக்கும் மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாகவும் இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி மற்றும் மத்திய அரசுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தமிழக அரசை கட்டுப்படுத்தாது என்று அறிவித்து உத்தரவிட வேண்டும் எனவும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆகவே மருத்துவ படிப்புகளில் சேர்க்கை நடைபெற நீட் தேர்வு நிபந்தனைக்கான சட்ட விதிகளை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் எனவும் இந்த மனதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.