fbpx

கொடுத்த காசை திருப்பி கேட்டது குத்தமா? மூதாட்டியை இரக்கமின்றி படுகொலை செய்த இளைஞர்!

கிராமப்புறங்களில் நம்பிக்கையின் பெயரில் முதியவர்கள், வேலைக்கு செல்ல இயலாதவர்கள் உள்ளிட்டோர் தனக்கு நம்பிக்கையானவர்களிடம் வட்டிக்காக பணம் கொடுத்து அவர்கள் வழங்கும் வட்டியை கொண்டு தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வருவார்கள்.

இது தமிழகத்தின் பல கிராமங்களிலும் நடந்து வரும் ஒரு வழக்கமான விஷயம்தான்.ஆனால் ஒருவர் நம்பி தன்னிடம் கொடுத்த பணத்தை திரும்பி கொடுக்காமல் ஏமாற்ற நினைக்கும் ஒரு சிலரால் பணத்தை கொடுத்தவர் மனம் நொந்து போனால் அதிலும் அவர் வயதான மூதாட்டியாக இருந்தால் என்னவாகும்?

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாரங்கியூர் பகுதியைச் சேர்ந்த இந்திராணி(72). இவர் கடந்த 19ஆம் தேதி 100 நாள் வேலைக்காக சென்று இருக்கிறார். ஆனால் இரவு வெகு நேரம் ஆன பின்னரும் அவர் வீடு திரும்பவில்லை. ஆகவே அண்டை வீட்டார்கள் இந்திராணியின் மகன் பன்னீர்செல்வத்திற்கு தொலைபேசியின் மூலமாக இது தொடர்பான தகவலை தெரிவித்து இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து பன்னீர்செல்வம் வழங்கிய புகாரின் அடிப்படையில் திருவெண்ணைநல்லூர் காவல் ஆய்வாளர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் மாரங்கியூர் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

காவல்துறையினரின் இந்த அதிரடி விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த சிவசங்கர்(26) என்ற தொழிலாளி இந்திராணியிடம் 30 ஆயிரம் ரூபாய் கடன் கடன் பெற்றுள்ளார் என்பது தெரியவந்தது .

மேலும் இந்திராணி 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று சிவசங்கர் தன்னுடைய வீட்டிற்கு வந்து கடன் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்திராணி சிவசங்கர் வீட்டிற்கு சென்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

ஆகவே சிவசங்கர் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றபோது அவருடைய வீட்டில் சிவசங்கர் இல்லை. ஆனால் சிவசங்கரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது புதிதாக கட்டி வரும் வீட்டில் இந்திராணி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தார். தலையில் பலத்த காயங்களுடன் காது அறுக்கப்பட்ட நிலையில், இருந்த இந்தி ராணியின் உடலை கைப்பற்றி பெரிய பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் தலைமுறைவான சிவசங்கரை தேடி வந்தனர். அதோடு சிவசங்கரின் தாயார் குப்புவிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினரின் அதிரடி விசாரணையில் சிவசங்கரின் தாயார் வழங்கிய வாக்குமூலம் வருமாறு என்னுடைய மகனுக்கு கொடுத்த பணத்தை மீண்டும் தருமாறு இந்திராணி எங்களை கேட்டுக் கொண்டே இருந்தார். என்னுடைய மகன் சிவசங்கர் திருமணமாகி ஒரு கைக்குழந்தையுடன் வெளியூரில் தச்சு வேலை செய்து வந்தான். அதனை அவனிடம் கூறினேன் சில நாட்களுக்கு குடும்பத்துடன் இங்கே வந்தார் எனவும் கூறியுள்ளார் குப்பு.

மேலும் சிவசங்கர் தனக்கே கடன் அதிகமாக இருக்கிறது பணம் அதிகமாக தேவைப்படுகிறது என்று தன்னிடம் கூறியதாக சிவசங்கரின் தாய் காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார்.மேலும் சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் நானும் 100 நாள் வேலைக்காக சென்று இருந்தேன். அப்போது நாங்கள் 100 நாள் வேலைக்கு சென்ற இடத்திற்கு அந்த என்னுடைய மகன் சிவசங்கர் இந்திராணியிடம் பணத்தை திருப்பி தருவதாக தெரிவித்து வீட்டிற்கு வரவழைத்து அவரை கொலை செய்து நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டிலேயே புதைத்து விட்டார் என்று கூறியுள்ளார்.

அதோடு 3 பவுன் நகையை விற்பனை செய்து இங்கு இருந்த கடன்களை அடைத்து விட்டு மீதமுள்ள நகைகளை எடுத்துக் கொண்டு மனைவியும் மற்றும் குழந்தைகளுடன் சிவசங்கர் வெளியூருக்கு சென்று விட்டதாக அவருடைய தாய் குப்பு தெரிவித்துள்ளார். 2 நாட்களில் மீண்டும் ஊருக்கு வருவதாகவும், அப்போது பிணத்தை எடுத்து வேறு இடத்தில் புதைத்து விடலாம் என்று தன்னிடம் மகன் சிவசங்கர் தொலைபேசியில் தெரிவித்துவிட்டு போனதாகவும், உடனடியாக குப்பு வீட்டிற்கு சென்று புதைக்கப்பட்டு இருந்த இடத்தில் மண்ணை தள்ளி மூடியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மூதாட்டியின் கொலைக்கு மகனுக்கு உடந்தையாகவும், கொலையை மறைத்ததற்காகவும் குப்புவை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர். குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ள சிவசங்கரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Next Post

விடியற்காலையில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த இருவர் கைது! காவல்துறையினர் அதிரடி!

Sat Dec 24 , 2022
தமிழக காவல்துறையினர் இரவு நேரங்களில் பல ஆபத்தான இடங்களாக கருதப்படும் பகுதிகளுக்கு ரோந்து பணிகளுக்கு செல்வதில்லை என்று தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பொதுமக்களிடையே கருத்து நிலவி வருகிறது.அதிலும் மதுரை பகுதியில் ஒரு சில இடங்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடாததால் அந்த பகுதிகளில் பல வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள். அந்த வகையில், சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பூமணி என்பவர் […]
’கில்லி’ பட பாணியில் பெண் கேட்ட தாய் - மகன்..!! பிளஸ்1 மாணவியை கட்டாய திருமணம் செய்து கொடுமை..!!

You May Like