fbpx

3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர்…..! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு திருப்பூர் அருகே பரபரப்பு….!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் கணேசன் (54) கூலி தொழிலாளியான இவர், 8 வயது, 6 வயது மற்றும் 11 வயது என்று 3 சிறுமிகளுக்கு கடந்த 2022 ஆம் வருடம் பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியிருக்கிறார். இது தொடர்பாக நமது சிறுமிகளின் பெற்றோர் வழங்கிய புகாரை அடிப்படையாக கொண்டு, கணேசனை அவிநாசி மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது இந்த வடக்கு நீதிபதி பாலு தீர்ப்பு வழங்கினார் அந்த தீர்ப்பில் 3️ சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கி கொலை மிரட்டல்விடுத்த கணேசன் என்பவருக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜர் ஆனார். இதனைத் தொடர்ந்து, கணேசன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Post

சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய கடை உரிமையாளரை போக்சோவில் தூக்கிய காவல் துறை…..!

Fri Mar 17 , 2023
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை சேர்ந்தவர் நடராஜன் (40) இவர் அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே எழுது பொருள் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி நேற்று பென்சில் வாங்குவதற்காக கடைக்கு வந்திருக்கிறார். அப்போது நடராஜன் சிறுமியை பாலியல் துன்புறுத்தி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த திருவி அழுது கொண்டே சென்று தலைமை ஆசிரியரிடம் இது […]

You May Like