fbpx

திருவள்ளூர் அருகே கல்குவாரி கோட்டையில் மூழ்கி மூதாட்டி உட்பட 3 பேர் உயிரிழப்பு…..! முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…..!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பெரியார் நகரை சேர்ந்தவர் பாபு(60). இவர் 3ஆம் தேதி மரணமடைந்தார் 30-ஆம் நாள் தூக்கம் நிகழ்வின் பங்கேற்பதற்காக அவருடைய உறவினர்களான திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள சந்தை வாசல் பகுதியை சேர்ந்த நரசிம்மன் என்பவரின் மனைவி மல்லிகா (65).

மாரிமுத்து என்பவரின் மகள் கோமதி( 14) மற்றும் விநாயகம் ஹேமலதா (16) உள்ளிட்டோர் திருத்தணிக்கு வந்தனர். இதில் கோமதி 8ம் வகுப்பு படித்து வந்தார். ஹேமலதா 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடிவுக்கு காத்திருந்தார்.

இத்தகைய நிலையில் மல்லிகா, கோமதி, ஹேமலதா வந்துட்ட மூவ ரும் நேற்றைய தினம் திருத்தணி பெரியார் நகர் பகுதியில் இருக்கின்ற சுமார் 50 அடி ஆழமுள்ள கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றள்ளனர். அப்போது கோமதி, ஹேமலதா உள்ளிட்ட இருவரும் கல்குவாரி குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர். இதனைக் கண்டு அதிர்ந்து போன மல்லிகா, சிறுமிகள் இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் அவரும் நீரில் மூழ்கி போனார்.

இவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள திருத்தணி நகராட்சி உரக்கிடங்கில் பணியாற்றி வரும் மணிகண்டன் உள்ளிட்டவர்கள் கல்குவாரி கூட்டத்தின் குறித்து மூவரையும் மீட்க்க முயற்சி செய்தனர். இதில் மல்லிகா சடலமாக மீட்கப்பட்டார். சிறுமிகள் அந்த தண்ணீரில் காணாமல் போயினர்.

இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு 2 சிறுமிகளையும் சடலமாக மீட்டெடுத்தன. திருத்தணி காவல்துறையினர் சட்டங்களை கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருத்தணி பெரியார் நகர் பகுதியில் 3க்கும் அதிகமான கல்குவாரி குட்டைகள் இருக்கின்றனர். இந்த குட்டைகளில் தேங்கியுள்ள நீரில் பலர் துணி துவைப்பது, குளிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இதில் உயிரிழப்பு நடைபெறும் அபாயம் இருக்கிறது. இந்த கல்குவாரிகளை சுற்றி பாதுகாப்பு வேலைகளை அமைக்க அரசு சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதற்கு நடுவே 3️ பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்ததை கேள்வியுற்ற முதல்வர் ஆழ்ந்த இரங்கலும், வருத்தமும் தெரிவித்து மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்

Next Post

லேப்டாப்பில் சார்ஜ் இல்லையா..? இனி கவலை வேண்டாம்..!! வந்தாச்சு புதிய பவர் பேங்க் சார்ஜர்..!!

Wed May 10 , 2023
பொதுவாக செல்போன்களுக்கு மட்டும்தான் பவர் பேங்க் சார்ஜர் உண்டு. நாம் வெளியிடங்களுக்கு செல்லும்போது பவர் பேங்க் எடுத்துச் சென்றால் செல்போன்களில் சார்ஜ் இல்லாவிட்டாலும் அதன் மூலம் சார்ஜ் செய்துக் கொள்ளலாம். இந்நிலையில், தற்போது லேப்டாப்புக்கும் பவர் பேங்க் சார்ஜர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆம்பிரான் என்ற நிறுவனம் பவர்லிட் அல்ட்ரா மற்றும் ஆம்பிரான் பவர்லிட் பூஸ்ட் பவர் என்ற இரு டிவைஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வெளியூர்களுக்கு செல்லும்போது […]

You May Like