தமிழகத்தில் இணையதள சூதாட்டத்தில் பல்வேறு உயிர்கள் பலியாகி உள்ளது. ஆகவே இணையதள சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என ஆளுநர் திருப்பி அனுப்பினார் இத்தகைய நிலையில், திருத்தம் செய்யாமல் மறுபடியும் தமிழ்நாடு சட்டசபையில் இந்த சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி ஆளுநர் ரவி இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். ஆகவே தற்போது இந்த சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது இத்தகைய நிலையில், இணையதள சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.
அதோடு மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இணையதள விளையாட்டு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.