fbpx

பேய் விரட்டுவதாக கூறி ஐந்து வயது குழந்தையை அடித்துக் கொலை செய்த பெற்றோர்..!

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் சுபாஷ் நகரில் வசித்து வருபவர் சித்தார்த் சிம்னி (45). இவரது மனைவி ரஞ்சனா (42). இவர்களுக்கு 16 மற்றும் ஐந்து வயதில் இரு மகள்கள் இருக்கின்றனர். சித்தார்த் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்நிலையில் சித்தார்த் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் கடந்த மாதம் தஹல்கட் பகுதியில் இருக்கும் தர்காவுக்கு சென்றுள்ளார். அங்கு சென்று வந்த பிறகு ஐந்து வயதான அவரது இரண்டாவது மகளின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரிவதாக நம்பினார்.

மேலும் தனது இரண்டாவது மகளுக்கு பேய் பிடித்துவிட்டதாக அவர் நினைத்தார். இந்த மூடநம்பிக்கையால் சித்தார்த் தனது மனைவி ரஞ்சனா மற்றும் உறவினர் பிரியா (32), ஆகியோருடன் சேர்ந்து அவரது ஐந்து வயது மகளுக்கு பேய் பிடித்துள்ளதாக நினைத்து, பேய் ஓட்டுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு மாந்திரீக செயலில் ஈடுபட்டுள்ளனர். மாந்தீரிகம், பூஜை செய்தபோது பேய்டம் கேள்வி கேட்பதாக நினைத்து, அந்த ஐந்து வயது குழந்தையிடம் பெற்றோர் கேள்விகளை கேட்டுள்ளனர். அதற்கு அந்த குழந்தை பதில் சொல்லாமல் அழுதுகொண்டே இருந்ததால், குழந்தையை பெற்றோர் கடுமையாக அடித்துள்ளனர். குழந்தையின் கண்ணத்திலும், உடலிலும் கடுமையாக அடித்துள்ளனர். இதை வீடியோ எடுத்து வைள்ளனர்.

பெற்றோர் கடுமையாக அடித்ததில் குழந்தை அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளது. இதை தொடர்ந்து, அந்த குழந்தையை பெற்றோர் சனிக்கிழமை அதிகாலை தர்காவுக்கு கொண்டு சென்றனர். பிறகு குழந்தையை அங்கிருந்து அருகே இருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு அங்கிருந்து வேகவேகமாக சென்றுள்ளனர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஆஸ்பத்திரி காவலாளி அவர்கள் வந்த காரின் நம்பர் பிளேட்டை புகைப்படம் எடுத்துள்ளார். இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என்பது தெரியவந்தது. இது பற்றி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு விசாரணை செய்தனர். மேலும் ஆஸ்பத்திரி காவலாளி எடுத்த காரின் புகைப்படத்திலுள்ள, காரின் எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், குழந்தையின் தந்தை சித்தார்த் சிம்னி, தாய் ரஞ்சனா மற்றும் அவரது உறவினர் பிரியா ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மூடநம்பிக்கையில் பேய் ஓட்டுவதாக சிறுமியை பெற்றோர் கடுமையாக தாக்கும் வீடியோவையும் காவல்துறையினர் கைப்பற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

கத்திப்பாரா அருகே சாலை வழிகாட்டி பலகை விழுந்து ஒருவர் உயிரிழப்பு..! அரசுப் பேருந்து பலத்த சேதம்..!

Sun Aug 7 , 2022
கத்திப்பாரா மேம்பாலம் அருகே வழிகாட்டிப் பலகை விழுந்து இருவர் காயமடைந்த நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்தார். சென்னை கத்திப்பாரா மேம்பாலம் அருகே சாலையில் பயணிப்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில் மிகப்பெரிய வழிகாட்டிப் பலகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த வழிகாட்டிப்பலகை இரு புறமுமிருந்த கம்பங்களோடு திடீரென பெயர்ந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை […]
கத்திப்பாரா அருகே சாலை வழிகாட்டி பலகை விழுந்து ஒருவர் உயிரிழப்பு..! அரசுப் பேருந்து பலத்த சேதம்..!

You May Like