மனைவியை கொலை செய்து மஞ்சள் தடவி பக்குவப்படுத்தி கட்டிளுக்கடியில் மறைத்து… எஸ்கேப்பான கணவன்…!

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் வசித்து வருபவர் நரசிம்மராஜ்(37). இவருக்கும், திருவானைக்காவல் கீழகொண்டையம்பேட்டையை சேர்ந்த சிவரஞ்சனியை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரதிக்ஷா(10), லக்ஷா(7) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நரசிம்மராஜ் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதில் தேவையான வருமானம் கிடைக்காததால் கஷ்டப்பட்டு குடும்பம் நடத்தும் நிலையில் இருந்துள்ளார். அதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிம்மராஜ் சமயபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டை விற்றுவிட்டு, நெ.1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் சாய்நகரில் வாடகை வீடு ஒன்று பார்த்து அதில் குடியேறினார். அந்த வீட்டில் அவரது தாய், மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வந்தார். மேலும் வீடு விற்ற பணத்தில் நரசிம்மராஜ் வாங்கியிருந்த கடன்களை அடைத்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் சிவரஞ்சனியின் வங்கி கணக்கில் போட்டுள்ளார்.

மீதி பணத்தில் புதிதாக தொழில் தொடங்க போவதாக தன் மனைவியிடம் கூறி ஒரு பெரிய தொகையை அவரை வைத்திருந்த வைத்திருந்தார். இந்நிலையில் மூன்று மாதங்களாக நரசிம்மராஜ் வேலைக்கு செல்லாமலும், புதிய தொழில் எதுவும் தொடங்காமலும் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் அவர் தொழில் தொடங்க வைத்திருந்த பணம் பற்றி சிவரஞ்சனி கேட்டுள்ளார். அப்போது நாகராஜ், அந்த பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளதாக கூறியுள்ளார். இருப்பினும் அந்த பணம் வராததால், இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி சிவரஞ்சனியின் அக்கா சசிகலா, செல்போனில் சிவரஞ்சனி மற்றும் நரசிம்மராஜை தொடர்பு கொண்டபோது, அவர்களது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவர் மறுநாள் சிவரஞ்சனியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டியிருந்ததால். அவர்கள் கோவிலுக்கு சென்றிருப்பார்கள் என்று நினைத்து, சசிகலா திரும்பி சென்றுள்ளார்.

இருப்பினும் நேற்றுவரை அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முடியாததால் சசிகலாவுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர் ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள நரசிம்மராஜின் சகோதரியை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் சிவரஞ்சனியின் மகள் பிரதிக்ஷா பேசியுள்ளார். தன்னுடைய அம்மாவிற்கு கொரோனா தொற்று இருப்பதால் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவதாக தன்னுடைய அப்பா கூறியதாகவும் அதனால் தன்னை அத்தை வீட்டில் விட்டு விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார். இதனால் மேலும் சந்தேகமடைந்த சசிகலா, சிவரஞ்சனியின் வீட்டிற்கு சென்று கதவின் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் பிளாஸ்டிக் பையில் சுருட்டி வைக்கப்பட்ட நிலையில் சிவரஞ்சனி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து கொள்ளிடம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சிவரஞ்சனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில், பணம் சம்பந்தமாக கணவன், மனைவிக்கு இடையே கடந்த 3 ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த நரசிம்மராஜ், சிவரஞ்சனியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பிறகு சிவரஞ்சனியின் உடல் முழுவதும் மஞ்சள் பொடி பூசி பிறகு ஒரு பிளாஸ்டிக் பையில் சுருட்டு படுக்கையறை படுக்கை அறையில் இருந்த கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் சிவரஞ்சனி நடந்திருந்த நகைகளையும் வீட்டில் பீரோவில் இருந்த நகைகளையும் எடுத்துக்கொண்டு தன்னுடைய மகள்களையும் தாய் வசந்தகுமாரையும் அழைத்துக் கொண்டு தப்பி சென்றது
தெரியவந்துள்ளது.

மேலும் காவல்துறையினர் விசாரணையில் மகள்கள் மட்டும் ஆந்திராவில் இருக்கும் நிலையில், நரசிம்மராஜும், அவரது தாய் வசந்தகுமாரியும் தலைமறைவாக இருப்பதால், இந்த கொலையை தாயும், மகனும் திட்டமிட்டு செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். இருப்பினும் தலைமறைவாக உள்ள நரசிம்மராஜ் பிடிபட்டால் மட்டுமே கொலை நடந்ததற்கான முழு விவரமும் தெரியவரும் என காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள தாய், மகனை தேடி வருகின்றனர். பெண் கொலை செய்யப்பட்டு உடல் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Baskar

Next Post

கோர விபத்து பலியான 2 வாலிபர்கள்: இருசக்கர வாகனத்தின் மீது மோதி மின்மாற்றி மீது இடித்து பஸ் தீப்பிடித்து எரிந்தது...!

Fri Jul 8 , 2022
கடலூர் முதுநகர் அருகே உள்ள பச்சையாங்குப்பத்தை சேர்ந்த சபரிநாதன் (30) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (38) என்பவருடன் சொந்த வேலைக்காக நேற்று மாலை குள்ளஞ்சாவடி சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இருவரும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இரவு 7 மணி அளவில் கடலூர் அடுத்த பெரியகாட்டுசாகை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த அதே சமயத்தில் கடலூரில் இருந்து 30 பயணிகளுடன் விருத்தாசலம் […]

You May Like