fbpx

3வது முறையாக மோடியை பிரதமர் ஆக்க மக்கள் தீர்மானித்து விட்டார்கள்…..! உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி…..!

மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஓராண்டு காலமே இருக்கின்ற சூழ்நிலையில், அந்த தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகளை பல முன்னணி அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கிவிட்டனர். இத்தகைய நிலையில், பீகார் மாநிலத்தில் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பீகாரருக்கு பயணம் ஆனார்.

அங்கே நவாடா மாவட்டத்தின் ஹிசுவாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மாநிலத்தில் உள்ள முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசின் கீழ் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என்றும் இந்த மாநிலத்தின் காட்டு ஆட்சி மறுபடியும் திரும்பி இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

நிதீஷ்குமாரை பாரதிய ஜனதா கட்சி பலமுறை முதல்வராக்கி அழகு பார்த்துள்ளது. ஆனால் மறுபடியும், மறுபடியும் அவர் பாஜகவிற்கு துரோகம் செய்திருக்கிறார். வெறும் அதிகாரத்திற்காக அவர் லாலு பிரசாத் யாதவியின் ஆர்.ஜே.டி கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். எதிர்வரும் கொள்ள மக்களவை தேர்தலில் மாநிலத்தில் இருக்கின்ற 40 மக்களவைத் தொகுதிகளையும் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். மறுபடியும் மோடியை பிரதமராக பொதுமக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

நிதீஷ்குமாரின் பிரதமராக வேண்டும் என்ற கனவு ஒருபோதும் பலிக்காது. மிக விரைவில் பீகார் மாநிலத்திலும் நிதிஷ்குமார் ஆட்சி கவிழும் என தெரிவித்திருக்கிறார் தன்னுடைய மகன் தேஜஸ்வி யாதவ் வருவார் என்று லாலு பிரசாத் யாதவ் கனவு கண்டு கொண்டிருக்கின்றார். ஆனால் நிதிஷ்குமார் அதற்கு வழி விட மாட்டார் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Next Post

XBB 1.16 கொரோனா மாறுபாடு குறித்து WHO வெளியிட்ட தகவல்.. அறிகுறிகள் என்னென்ன..? யாருக்கு அதிக ஆபத்து..?

Mon Apr 3 , 2023
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது.. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 3000-ஐ கடந்துள்ளது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. […]
ஜூன் மாதத்தில் பரவும் புதிய வகை கொரோனா? அதிமுக எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பரபரப்பு பதில்..!

You May Like