fbpx

பிறந்தநாள் விழாவிற்கு சென்றவர்கள் பிணமாக திரும்பிய சோகம்.. கார் மீது லாரி மோதியது விபத்து..!

கர்நாடக மாநிலம் கொபல் மாவட்டம் கூகனூர் தாலுகா பின்யல் கிராமத்தில் குடியிருப்பவர் தேவப்பா கூப்பட் (62). இவர் தனது சொந்தக்காரரின் பேத்தியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள் கொபல் நகருக்கு நேற்று இரவு காரில் சென்றுள்ளார். தேவப்பாவுடன் அவரது உறவினர்கள் 9 பேர் காரில் சென்றுள்ளனர்.

இந்நிலையில், பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நேற்று இரவு காரில் ஒன்பதுபேரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில் பஹன்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலையின் எதிரே வந்த லாரி மீது வேகமாக கார் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

டிக் டாக் வெளியிட்ட பெண்.. வீட்டிற்கு வந்து முன்னாள் கணவர் செய்த கொடூர செயல்...!

Sun Jul 24 , 2022
பாகிஸ்தானை சேர்ந்தவர் சானியா கான் (29). இவர் அமெரிக்காவில் புகைப்பட கலைஞராக இருந்து வந்துள்ளார். 2021ம் ஆண்டு ஜூனில் சிகாகோ நகருக்கு குடிபெயர்ந்து இருக்கிறார். இவரது முன்னாள் கணவர் ரஹீல் அகமது (36). அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் ஆல்பாரெட்டா நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் அகமது, சிகாகோவில் உள்ள சானியாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதைதொடந்து அகமது மற்றும் சானியா இருவரும் துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டு சானியாவின் வீட்டில் கிடப்பது பற்றிய […]

You May Like