fbpx

ஒரு கல்லூரி பேராசிரியர் செய்யும் காரியமா இது…..? மாணவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் பணியிடை நீக்கம்……!

கோவையில் பிரபல தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் டீன் மற்றும் உயிர் வேதியியல் துறை தலைவராக இருந்து வருபவர் மதனசங்கர். இவரிடம் முனைவர் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் மதன் சங்கர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபடுவதாக பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் உள்ளிட்டவற்றில் புகார் வழங்கினார். இந்த புகார் தொடர்பாக விசாரணை செய்ய ஐசிசி கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது இதில் மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆகவே கல்லூரியின் டீன் மற்றும் உயிர் வேதியல் துறை தலைவராக இருந்த மதன் சங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இத்தகைய நிலையில், ஐசிசி கமிட்டி விசாரணை அறிக்கையும் பாதிக்கப்பட்ட மாணவருக்கும், கல்லூரி டீனுக்கும் இடையில் நடந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோவும் வெளியானது.

அதில் மாணவரை பேராசிரியர் மதம் ஷங்கர் சமரசபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவது பதிவாகி இருந்தது. விசாரணையின் அறிக்கையில் முனைவர் பட்ட மாணவரை இந்தோனேசியா, சென்னை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று கல்லூரி டீன் மதன் சங்கர் பாலியல் தொந்தரவு செய்திருப்பதும் தெரிய வந்தது. இத்தகைய சூழ்நிலையில், ஐசிசி கமிட்டி விசாரணை நடத்திய பின்னரும் கூட கல்லூரி டீன் மதன் சங்கர் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவர் குற்றம் சுமத்தி இருக்கிறார்.

ஒன்றரை ஆண்டு காலமாக பேராசிரியர் பாலியல் ரீதியாக அத்துமீறினார் என்றும், மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பேசும் வழக்கம் உடையவர் மதன் சங்கர் எனவும் மேலும் அவர் சொல்லும் படியாக கேட்காவிட்டால் கையெழுத்து போட மாட்டார் எனவும் பாதிக்கப்பட்ட மாணவர் கூறியிருக்கிறார். ஐசிசி கமிட்டி விசாரணை நடத்தி முடித்து இருக்கின்ற சூழ்நிலையில் டீன் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் அவர் ஆசிரியர் பணியில் இருக்கக் கூடாது, மற்ற மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது ஏற்கனவே இவரால் பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பாதிக்கப்பட்ட அந்த மாணவர் குற்றம் சுமத்தி இருக்கிறார். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது முதல் கட்ட விசாரணை நடந்து முடிந்திருப்பதாகவும், அடுத்த கட்ட விசாரணைக்கு பிறகு சட்ட ரீதியான நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்யப்படும் எனவும் கூறியிருக்கிறார்கள். கல்லூரியில் முதல்வருக்கு அடுத்த நிலையில் இருக்கும் டீன் மதன்ஷங்கர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி நடவடிக்கைக்கு உள்ளாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

ராகுல்காந்தி தகுதி நீக்கம்.. உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்...

Sat Mar 25 , 2023
ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. 2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவரும் எப்படி மோடி என்ற பொதுவான பெயரை வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.. இதையடுத்து பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.. […]

You May Like