பன்னிரண்டாம் வகுப்பு மாணவனுடன், கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆசிரியை க்கு நேர்ந்த பரிதாபம்..!

உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை(35), தன் கணவர் மற்றும் தாயாருடன் வசித்து வந்தார். அவருடைய கணவரும் ஓர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில் அந்த ஆசிரியைக்கு அயோத்தி மாவட்டத்திலுள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு, டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த மாணவனுடன் அந்த ஆசிரியைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது அந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனிடையே, அந்த ஆசிரியை 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த மாணவன், அவர்கள் இருவருக்கும் உண்டான உறவை முறித்துக்கொள்ள விரும்பினான். குறித்து அந்த மாணவன் ஆசிரியரிடம் கூறியுள்ளான், ஆனால் அதற்கு அந்த ஆசிரியை ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் அந்த மாணவன் ஆசிரியை தனியாக வீட்டில் இருந்ததை தெரிந்துகொண்டு கூர்மையான கத்தியால் கொடூரமாக பல முறை குத்தி கொலை செய்துவிட்டு மாணவன் தப்பிவிட்டான். இது வெளியில் தெரிந்தால் அவமானமாக இருக்கும் என்று எண்ணி, இந்த வழக்கை திருட்டு வழக்காக மாற்ற முயற்சித்த மாணவன், அந்த வீட்டில் உள்ள பீரோவில் இருந்த ஐம்பதாயிரம் பணத்தை எடுத்துச் சென்றுள்ளான்.

ஜூன் 1 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், காவல்துறையினர் கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். அப்பொழுது அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் ஒருவன் சந்தேகபடும்படியாக டி-சர்ட் அணிந்து கொண்டு அங்கே நடமாடியதை கண்டனர். அந்த டி-சர்டில் இருந்த நிறுவனத்தின் பெயரை வைத்து துணிக்கடைகளில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் நேற்று அந்த மாணவனை மடக்கிப்பிடித்து உண்மையை வெளிக்கொனர்ந்தனர். மேலும், ஆசிரியையை கொலை செய்த 12 ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான்.

சிசிடிவி காட்சிகளில் அந்த மாணவன் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு மேலும் அவனை பிடிக்க அவனது டி-சர்ட் உதவியது. கைது செய்யப்பட்ட சிறுவன் கொலை செய்யப்பட்ட ஆசிரியையுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால், முறைதவறிய இந்த உறவு, சமூகத்தில் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில், அவன் ஆசிரியையுடனான உறவில் இருந்து வெளியேற விரும்பியுள்ளான். ஆனால், அந்த ஆசிரியை அதற்கு சம்மதிக்கவில்லை மேலும் அவனை மிரட்டியுள்ளார். அதனால் என்ன செய்வது என தெரியாமல் தவித்த மாணவன், அந்த ஆசிரியையை கொலை செய்துள்ளான். நிலையில் மாணவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Baskar

Next Post

’வாரிசு அரசியல் செய்யும் கட்சிகளால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது’..! யாரை தாக்குகிறார் மோடி..!

Mon Jul 4 , 2022
நாடு வாரிசு அரசியலைப்‌ பார்த்தும்‌, வாரிசு அரசியல்‌ செய்யும்‌ கட்சிகளைப்‌ பார்த்தும்‌ நொந்துவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி, “பாக்யா நகரான ஹைதராபாத், நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல சமஸ்தானங்கள், பிராந்தியங்களை ஒன்றிணைத்து, […]
திமுக - காங். கூட்டணியில் குழப்பம்..? ஆம் ஆத்மியுடன் நெருக்கம்..! அதிருப்தியில் காங். தலைவர்கள்..!

You May Like