fbpx

நாளை வெளியாகிறது +2 தேர்வு முடிவுகள்…..! அறிவிப்பை வெளியிட்டது அரசு தேர்வுகள் துறை….!

சென்ற மார்ச் மாதம் 13ஆம் தேதி ஆரம்பமான 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ஏப்ரல் மாதம் ஏப்ரல் மாதம் 3ம் தேதி முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வை 4,33000 மாணவிகளும் 4,16000 மாணவர்களும் 23,747 தனித் தேர்வர்களும் எழுதினர்.

ஒட்டுமொத்தமாக 8.50 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை வெளியாக இருக்கிறது அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவுகளை நாளை காலை 9:30 மணி அளவில் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இந்த முடிவுகளை www.dge.tn.gov.in www.tnresults.nic.in போன்ற இனைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை கூறியுள்ளது. அத்துடன் மாணவர்களுக்கு குறுஞ்செய்தியின் மூலமாகவும் முடிவுகள் அனுப்பி வைக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அதோடு மாணவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டிருக்கின்ற தேசிய தகவல் மையத்திலும் இந்த முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சார்ந்தவர்களை நாளைய தினமே பள்ளிகளில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் துறை கூறி இருக்கிறது.

Next Post

வங்கக்கடலில் ஏற்படுகிறது புதிய புயல் சின்னம்…..! இந்த தேதி வரையில் தமிழகத்தில் மழை தான் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…..!

Sun May 7 , 2023
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியிருக்கின்ற வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. இது வரும் செவ்வாய்க்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வடக்கு திசை நோக்கி நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெறலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இன்று முதல் வரும் 10ம் தேதி வரையில் தமிழகம், […]

You May Like