சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 2400 கோடி மதிப்பீட்டில் 2 லட்சத்து 36 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஒருங்கிணைந்த விமான தளங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இதன் முதல் கட்டட பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றன. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்து இருக்கின்ற நிலையில், தற்சமயம் அதிநவீன கருவிகள், உபகரணங்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
5️ தளங்களைக் கொண்ட இந்த புதிய விமான தளத்தில் தரைத்தளத்தில் சர்வதேச பயணிகள் வருகைக்காகவும், 2வது தளத்தில் பயணிகள் புறப்படுவதற்கான நடைமுறைகளும் முன்னெடுக்கப்படும். இங்கே வாகனம் நிறுத்துமிடம், வணிக வளாகம், திரையரங்குகள் போன்றவை ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில், வரும் 27ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி புதிய ஒருங்கிணைந்த விமான தளத்தை முறைப்படி திறந்து வாய்க்க உள்ளார் என்று தகவல் கிடைத்திருக்கிறது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் போன்றோர் பங்கேற்றுக் கொள்ள உள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.