fbpx

அடப்பாவிங்களா எலிக்கெல்லாமா போஸ்ட்மார்ட்டம் பண்ணுவீங்க……? வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்…..!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் பதாயு நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார் (30) மண்பாண்டம் செய்து வரும் இவர், சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு எளியின்பாலில் கல்லை கட்டி அதனை சாக்கடையில் தூக்கி போட்டார். கல்லின் கணம் அதிகமாக இருந்ததால் எலி மேலே வர இயலாமல் தண்ணீரில் மூழ்கி துடி துடித்து உயிரிழந்தது.

ஆனால் அந்த இறந்து போன எலியை விகேந்திர ஷர்மா என்ற விலங்குகள் நல ஆர்வலர் சாக்கடையில் இருந்து எடுத்து அதன் பிறகு அந்த எலியை வைத்து அவர் மனோஜ் குமாருக்கு எதிராக சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இதனை அடிப்படையாகக் கொண்டு மனோஜ் குமார் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். உள்ளூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் கொடுத்தது.

உயிரிழந்த எலியின் உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் எலி தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. ஆகவே பிரேத பரிசோதனை அறிக்கை, வீடியோ ஆதாரம், உள்ளூர் மக்களின் வாக்குமூலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு மனோஜ் குமாருக்கு எதிராக விசாரணை அதிகாரி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

காவல்துறை அதிகாரியின் ஆய்வுக்கு பின்னர் இது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று காவல்துறையினர் நேற்று கூறியிருந்தார்கள். எலி கொல்லப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது அந்த மாநிலத்தில் இதுவே முதல் முறை என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுகர் வழங்கிய விகேந்திர ஷர்மா தெரிவித்ததாவது, எலிகள் பலருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதாக இருந்தாலும் அது கொல்லப்பட்ட விதம் மிகவும் கொடூரமானது. இனிவரும் காலங்களில் விலங்குகளை யாரும் இதே போல கொல்ல முயற்சி செய்யக் கூடாது என்பதற்காகவே இந்த வழக்கை நான் தொடர்ந்தேன் என்று கூறினார்.

குற்றம் சுமத்தப்பட்ட மனோஜ் குமார் இது தொடர்பாக தெரிவித்ததாவது, என்னுடைய குழந்தைகள் தான் எலியை கொன்றனர். அதனை எடுத்து நான் சாக்கடையில் தான் போட்டேன். இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர் என்று கூறியுள்ளார்.

Next Post

#Breaking : ராணுவ முகாமில் திடீர் துப்பாக்கிச்சூடு.. 4 பேர் உயிரிழப்பு.. பஞ்சாபில் பரபரப்பு..

Wed Apr 12 , 2023
பஞ்சாபில் உள்ள ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. பஞ்சாபில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிகாலை 4.30 மணிக்கு நடந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.. விரைவு நடவடிக்கை குழுக்கள் தீவிரப்படுத்தப்பட்டு ராணுவ முகாமில் அதி தீவிர சோதனை நடைபெற்று […]

You May Like